பாகுபலி-2 ட்ரெய்லர்: கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் எனத் தெரிந்ததா?

இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

உலகையே இந்திய சினிமாவின் பக்கம் திருப்பிய பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது. முதல் பாகம் வெளியானபோது கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்ற கேள்வி சமூகவலைதளங்களை பரவலாக எழுந்தது. இந்த நிலையில், இன்று வெளியான பாகுபலி 2ம் பாகத்தின் ட்ரெய்லரில் இதற்கான விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

இந்த நிலையில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்விக்கு ட்ரெய்லரில் ராஜமவுலி விடை அளிக்கவில்லை. அதேநேரம், மகிழ்மதிக்காக உயிர் தியாகம் செய்ய ராஜமாதாவிடம் சத்தியம் அளித்துள்ளேன் என்று பாகுபலி கதாபாத்திரம் பேசுவது போன்றும், கட்டப்பா கதாபாத்திரத்தை நோக்கி, மாமா உன்னை மீறி என்னைக் கொல்ல வேறு எந்த சக்தியால் முடியும் என்றும் பாகுபலியான பிரபாஸ் பேசுவது போல வசனங்களை அமைத்துள்ளார் ராஜமவுலி. இதனால், நாட்டுக்காக பாகுபலி தனது உயிரைத் தியாகம் செய்திருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கணிக்கத் தொடங்கிவிட்டனர்.