கொடிவீரனுக்கு ரெடியாகிறார் ஹன்சிகா

Hansika

பலே வெள்ளையத் தேவா படத்துக்குப் பிறகு சசிகுமார் நடிக்கும் படம் கொடிவீரன். மருது படத்துக்குப் பிறகு முத்தையா இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க சில நடிகைகளிடம் பேசிவந்தனர். இப்போது ஹன்சிகா நடிக்கிறார்.

இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, ஹன்சிகாவிடம் பேசியிருப்பது உண்மைதான். அவரும் நடிக்க சம்மதித்துள்ளார். அவர் இரண்டு தெலுங்கு படத்தில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்னை இருக்கிறது. சரியாகிவிடும் என நம்புகிறோம் என்றனர். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ஏற்கனவே சசிகுமார், முத்தையா கூட்டணி, குட்டிப் புலி படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.