அகதிகள் பிரச்னை: ஏஞ்சலினா ஜோலி கவலை

Jolie

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அகதிகள் பிரச்சினைக்கு கூடுதல் கவனம் செலுத்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா.சபை கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பல்வேறு நாடுகளில் நிலவும் வெறுப்பும் பகையுணர்வும்தான் அகதிகள் அதிக அளவில் வெளியேற முக்கியக் காரணம் என்று கூறிய ஏஞ்சலினா, சட்டங்களை மனித நேயத்துடன் இயற்றுமாறு உலக நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். அகதிகளை ஏற்றுக் கொள்வதுதான் மனிதாபிமானம் என்றும் அவர் வலியுறுத்தினார். மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு தூதராக நியமனம் செய்யப்பட்டவர் ஏஞ்சலினா ஜோலி.