சூர்யா படம் இந்தித் தழுவலாமே!

Surya l

சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ இந்திப் படத்தின் தழுவல் என்று தெரிய வந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றும் சுரேஷ் மேனன், செந்தில், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்தப் படம் அக்‌ஷய்குமார், காஜல் அகர்வால் நடித்து இந்தியில் வெளியான ’ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இதை முதலில் மறுத்த படக்குழு, இப்போது ஒப்புக்கொண்டுள்ளது.

‘ஸ்பெஷல் 26 படத்தை அப்படியே ரீமேக் செய்யவில்லை. தமிழுக்கு ஏற்ப மாற்றம் செய்துள்ளோம். சூர்யா, சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். அவர் கேரக்டரை நிறைய மாற்றியுள்ளோம். படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்துவருகிறது’ என்றது பட வட்டாரம். அனிருத் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.