செய்திகள் உண்மை உடனுக்குடன்

துறு துறு ஹன்சிகா...

Hansika fb

அரண்மனை படத்த தொடர்ந்து ஹன்சிகா நடிப்புல வெளிவரவிருக்கும் படம் போக்கிரி ராஜா.

காமெடிக்கு முக்கியதுவும் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில ஹன்சிகாவுக்கு முக்கிய ரோல்னு சொல்றாங்க. அதுவும் துறு துறுனு இவங்க செய்யும் கலாட்டா ரசிகர்கள் மத்தியில பெரிய வரவேற்ப வாங்கும்னு படக்குழுவினர் சொல்றாங்க.

கோலிவுட்ல தனக்குன்னு ஒரு இடத்த பிடிச்சிருக்கும் ஹன்சிகா தமிழ் சினிமாவுல இருந்து விலகப்போறாங்கன்னு சில வாரங்களா செய்திகள் பரவிக்கிட்டிருந்துச்சு. அதுகேத்தமாதிரி உதயநிதி நடிக்கும் மனிதன் படத்தில மட்டும்தான் நடிச்சு வந்தாங்க.

ஆனா கோலிவுட்ல சுத்திக்கிட்டிருக்கும் தகவல பொய்யாகும் விதமா மேலும் இரண்டு படங்கள்ல நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியிருக்காங்க. அதுல ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் போகன் படம் ஹன்சிகாவுடைய ரோல்ல சுத்தி நடக்கும் கதையாம்.

அதனால தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களையும் சினிமா துறையினரையும் மிரள வைக்கபோறாங்கனு பேசிக்கிறாங்க. இதோடு இன்னும் சில முன்னணி இயக்குனர்கள் படங்கள்ல நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டுவர்றாங்களாம் ஹன்சிகா.