ஒருதலை காதலால் விபரீதம்: சென்னையில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து

சென்னை கோயம்பேட்டில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்தப் பெண் நேற்றிரவு சொந்த ஊ‌ரான திருவாரூக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். இவருடன் பணிபுரிந்துவரும் அரவிந்த்குமார் என்பவர் அவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பேருந்து நிலையத்திற்கு வந்த அரவிந்த் குமார், திடீரென அந்த பெண்ணை கத்தியால் தாக்கியுள்ளார். இதில் முகத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரவிந்த்குமாரை போலீஸார் கைது செய்தனர்.