செய்திகள் உண்மை உடனுக்குடன்

குடிக்க பணம் கேட்டு மிரட்டியதால் மகனை வெட்டிக் கொன்ற தாய்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குடிப்பதற்காக பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை தாயே வெட்டி கொலை செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி . இவரது மகன் அண்ணாதுரை விசைத்தறி பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு தாய் லட்சுமியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் தாயிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த தாய் லட்சுமி அண்ணாதுரையை கறி வெட்டும் அரிவாளால் வெட்டியதில் அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாதுரையின் மனைவி சுமதி, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் இதையடுத்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து நாமக்கல் டி.எஸ்.பி. வெங்கடேஸ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்தனர். அவர்கள், அண்ணாதுரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராசிபுரம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணாத்துரையின் தாயார் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.