செய்திகள் உண்மை உடனுக்குடன்

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சென்னை புழல் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக, கர்ணன் என்பவர் உள்ளிட்ட 6 பேர் மீது புழல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கர்ணன் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை, புழல் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் கர்ணன் அளித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஜெயக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர். புழல் சரக உதவி ஆணையர் லிங்க திருமாறனிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.