செய்திகள் உண்மை உடனுக்குடன்

இளையராஜா கூறுவது தவறு: கங்கை அமரன்

இசையமைப்பாளர் இளையராஜா தன் பாடல்களை மற்றவர்கள் பாடக்கூடாது என கூறுவது தவறு என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

மேடைக் கச்சேரிகளில் தனது பாடல்களை அனுமதி பெறாமல் பாடுவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கை அமரன், தன் பாடல்களை மற்றவர்கள் பாடக் கூடாது என இளையராஜா கூறுவது தவறானது. ராயல்டி கொடுத்துவிட்டு பாட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இளையராஜாவின் இசையை நாம் வியாபாரமாக பார்க்கவில்லை. மூச்சுக் காற்றாக சுவாசிக்கிறோம் எனக் கூறிய கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது தவறு என்றார்.