ஓடும் ரயிலை நிறுத்தி அரங்கேறியது கொள்ளை

Robbery l

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஓடும் ரயிலை நிறுத்தி பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி நோக்கி சென்ற ரயில் நள்ளிரவில் மொரப்பூரை அடுத்த தொட்டம்பட்டியில் சிக்னல் கிடைக்காமல் திடீரென நிறுத்தப்பட்டது. அப்போது, கத்தியை காட்டி மிரட்டி பெண் பயணிகளிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சிக்னல் கேபிளை துண்டித்ததன் மூலம் ரயிலை நிறுத்தி இந்த கொள்ளை சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றிய‌தாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ‌ரயில்வே பாதுகாப்புப் படையினர், கொள்ளை நடந்த தொட்டம்பட்டி மற்றும் மொரப்பூர் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். மொத்தம் எத்தனை பயணிகளிடம் கொள்ளைய‌டிக்கப்பட்டது, அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டும் இதே பகுதியில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.