செய்திகள் உண்மை உடனுக்குடன்

கழுத்தை அறுத்து டீச்சர் கொலை: மக்கள் அடித்து கொலைகாரன் சாவு

Murderr

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தொழில்போட்டியில் பெண்ணைக் கொன்றதாக இருவரை பொதுமக்கள் தாக்கினர். அதில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்தார்.

தலைவாசல் அருகேயுள்ள ஆரகளூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மாரியப்பன் சபரிமலைக்கு‌ச் சென்றிருந்த நேரத்தில், வீட்டுக்கு வந்த ராஜேந்திரன், அவரது மகன் விஜய் ஆகியோர் மாரியப்பனின் மனைவி சத்யாவிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றிய நிலையில், சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அலறல் கேட்டு அங்கு‌ சென்ற அப்பகுதி மக்கள், கொலையாளிகள் என இருவரையும் தாக்கி, வீட்டின் உள்ளே வைத்து பூட்டினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, ராஜேந்திரனும் இறந்து கிடந்தார். காயங்களோடு கிடந்த விஜயை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு சடலங்களை கைப்பற்றிய போலீஸார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரட்டை கொலை நடந்ததால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்யாவை கொலை செய்த விஜய், ஆறகழுர் பஸ் நிலையம் பகுதியில் கணினி சென்டர் நடத்தி வருகிறார். அதை சத்யாவின் உறவினர்கள் மற்றும் ஊர்பொ பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். மேலும் விஜய் மற்றும் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள்களையும் தீ வைத்து எரித்தனர்.