பழம் நழுவி பாலில் விழும் என்ற கருணாநிதியின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது: அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

பழம் நழுவி பாலில் விழும் என திமுக தலைவர் கருணாநிதி கூறிய நிலையில், அவரது எண்ணத்தில் மண் தான்‌ விழுந்துள்ளதாக அமைச்சர் MC சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில், அதிமுக ஆட்சியின் 5 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது: கிட்டத்தட்ட 60. 70 ஆண்டுகளுக்கு சொந்தக்காரர், எதிர்க்கட்சி தலைவர் அவர், அதோடு பழுத்த பழம் நழுவி பாலில் விழுமா, விழுமா என்ற எண்ணத்தில் மண் விழுந்தது தான் மிச்சம். இப்படிப்பட்ட அவல நிலைக்கு அவர் தள்ளப்படக்கூடாது. அவர் கண்ணெதிரே திராவிட முன்னேற்றக்கழகம் அழிந்துவரும் சூழ்நிலையை;தமிழக மக்கள் பார்க்கின்ற ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றார்.