செய்திகள் உண்மை உடனுக்குடன்

பொறியியல் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க ஆலோசனை

மருத்துவக் கல்லூரிகளை தொடர்ந்து, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேஇஇ எனப்படும் ஜாயின்ட் எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எனப்படும் நுழைவுத் தேர்வை அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் கட்டாயமாக்குவது குறித்து மத்திய மனிதவள மேம்ப்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இது குறித்து டெல்லி வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மை இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டம் 2018- ஆம் ஆண்டு முதலே அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அதிகாரிகள் கூறினர். தற்போது இந்தப் பொதுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.