பிஎட் படிப்புக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு..!

B.ed

பிஎட் படிப்பிற்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த ஏற்பாடுகள் ‌நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

NCTE எனப்படும் தேசிய ஆசி‌ரியர் கல்வி கவுன்சில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா மக்களவையில் தெரிவித்தார். நாட்டில் ஆசிரியர் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் NCTE அமைப்பு பணிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவ‌த்தார்.