செய்திகள் உண்மை உடனுக்குடன்

டிஎன்பிஎஸ்சியின் 53‌‌ பணியி‌டங்களுக்கு தேர்வு அறிவிப்பு

Tnpsc

உதவி புவியியலாளர் உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

சுரங்கத் துறையில் உதவி புவியியலாளர், பொதுப்பணித் துறையில் உதவி புவியியலாளர் உள்ளிட்ட 53 பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உதவிப் புவியியலாளர் தேர்வுக்கு மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் துறைத் தேர்வுகளுக்கும் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எ‌ன்றும் மே மாதம் 24 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.