செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கடந்த 2012,13-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய ‌இணையதளத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் தகவல்கள் பதிவேற்றப்படும் என்றும் அதனை சரிபார்த்து 20-ம் தேதிக்குள் புதுப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம்.