செய்திகள் உண்மை உடனுக்குடன்

200க்கு 200..! அசத்திய மாணவர்கள்

இன்று வெளியான ப்ளஸ்-2 தேர்வு முடிவுகளில் தமிழ்- ஆங்கிலம் ஆகிய மொழித்தேர்வுகளில் எந்த மாணவரும் 200க்கு 200 மதிப்பெண்களை பெறவில்லை.

அதேவேளை அதிகபட்சமாக வணிகவியல் பாடத்தில் 8301 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.

கணக்குபதிவியல் பாடத்தில் 5, 597 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 1647 மாணவர்களும், கணிதத்தில் 3,656 பேரும் 200 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் 1717 பேரும், வேதியலில்- 1,123 மாணவர்களும் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இயற்பியலில்- 187 பேரும், புள்ளியியல் பாடத்தில் 68 மாணவ- மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.