செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஈரோடு: விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள விஜயகாந்தை அழைத்த விவசாயிகள்

Vijayakanth11

ஈரோட்டில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

92 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி இம்மாநாடு நடக்க உள்ளதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.