செய்திகள் உண்மை உடனுக்குடன்

தீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருகிறேன்: ஜெயலலிதா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மீண்டும் மகத்தான வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பிறகு, ஜெயலலிதா, இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார்.

ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்த அவருக்கு, தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு, தேனி, திண்டுக்கல், விழுப்புரம் தெற்கு, நாமக்கல், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகங்கள் மற்றும் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைகளை காணொலி காட்சி மூலம் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், அதிமுகவின் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். மேலும், வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று உறுதிபடத் தெரிவித்த ஜெயலலிதா, அதற்கு தீயசக்திகளிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி வருவதாக குறிப்பிட்டார்.