செய்திகள் உண்மை உடனுக்குடன்

பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கிறதா தமிழகம்?

Baby born

ஒரு வயதுக்கு முந்தைய பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய குடும்ப சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா முழுவதும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைவாக கொண்ட மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 6.

பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சத்தீஸ்கர் மாநிலத்தின் அதிகம். இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 54.

இந்த வரிசையில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இங்கு பிறக்கும் 1000 குழந்தைகளில், 1 வயதிற்கு முன் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 21.

இதேபோல் மற்ற மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை விவரம்

மகராஷ்ட்ரா-24

மேற்குவங்கம்-27

கர்நாடகா-28

ராஜஸ்தான்-41

ஜார்க்கண்ட்-44

பீகார்-48

அஸ்ஸாம்-48