செய்திகள் உண்மை உடனுக்குடன்

நம்பர் 1 இடத்தைப் பிடித்த "ரயில் நீர்"

Rail neer 700 x 350

இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வரும் “ரயில் நீர்” விற்பனை மற்றும் தரத்தில் நம்பர் -1 பிராண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்காக பல்வேறு வகை நிறுவனங்களை சேர்ந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், Consumer Voice என்ற பத்திரிக்கை மேற்கொண்ட ஆய்வில் 12 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களைவிட, இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவுக் கழகம் சார்பில் தயாரிக்கப்படும் “ரயில் நீர்“ என்ற சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதிக அளவில் விற்பனை ஆவதாக தெரியவந்துள்ளது. மற்ற நிறுவனங்களை விட ரயில் நீரின் விலை குறைவாக உள்ளதோடு, தரமும் நன்றாக உள்ளதால் மக்கள் இதற்கு அதிக வரவேற்பு அளித்துள்ளனர்.