காவல்துறை குதிரையைத் தாக்கிக் காலை ஒடித்த உத்தராகண்ட் பாஜக எம்எல்ஏ

Bjp mla

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பாஜக நடத்திய போராட்டத்தின்போது காவல்துறை படைப்பிரிவைச் சேர்ந்த குதிரையை எம்எல்ஏ ஒருவர் லத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநில அரசுக்கு எதிராக டேராடூனில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காவல்துறைப் படைப்பிரிவைச் சேர்ந்த குதிரை ஒன்றினை பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் அந்தக் குதிரையின் கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.