விவசாயிகளுக்கு பி‌ரதமர் மோடி வேண்டுகோள்

விவசாய வருவாயை மட்டுமே நம்பியிராமல் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு விவசாயத் துணைத் தொழில்களை செய்யுமாறு விவசாயிகளுக்கு பிரதமர் மோடி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 3 நா‌ட்‌கள் நடைபெறும்‌ விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்த அவர், விவசாயத்தை முற்றிலும் கைவிடுவதைத் தவிர்த்து, கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கு பால், பால் பொருட்கள், கோழி மற்றும் ஆட்டுப் பண்ணைகள், உணவு பதப்படுத்‌தல் ஆகிய துணைத் தொழில்களை மேற்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.