வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் நூதன போராட்டம்

தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

கண்களில் கறுப்புத் துணியை கட்டிக் கொண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், பிரதமர் மோடி உறுதியளித்தபடி நதிகளை ஒருங்கிணைக்கவிலை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.