செய்திகள் உண்மை உடனுக்குடன்

உத்தரகாண்டில் ஜனநாயகப் படுகொலை:காங்கிரஸ்

Ambika soni

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதன் மூலம், உத்தரகாண்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

பாரதிய ஜனதாவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கை வியப்பைத் தரவில்லை என்று காங்கிரஸ் ‌பொதுச் செயலாளர் அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

சிறிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது பிரதமர் மோடிக்கு கைவந்த கலையாகிவிட்டதாகவும் சோனி கூறினார். ம‌த்திய அரசின் ஒவ்வொரு அடியிலும் அரசியலமைப்பு சட்டம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மாநில ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை எதனையும் அனுப்பவில்லை என்றும் அம்பிகா சோனி குறிப்பிட்டார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்திருந்தால் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்திருப்பார் என்றும் அம்பிகா சோனி தெரிவித்தார்.