செய்திகள் உண்மை உடனுக்குடன்

உத்தராகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை

Valluvar

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட உள்ளது.

இந்த சிலை செய்யும் பணியை அம்மாநில ஆளுநர் கே.கே.பால், டேராடூனில் தொடங்கிவைத்தார். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய்யின் முயற்சியின் பேரில் இச்சிலை நிறுவப்பட உள்ளது.

இச்சிலையை உருவாக்குவதற்காக தருண் விஜய், தனது தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாயை அளித்துள்ளார். ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுவது மூலம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் ‌இந்தியா என்ற நம்பிக்கை மேலும் வலுவடையும் என தருண் விஜய் தெரிவித்தார்.