செய்திகள் உண்மை உடனுக்குடன்

உத்தராகண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

உத்தராகண்டில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்த தனது இறுதி முடிவை, உச்சநீதிமன்றத்தில் வரும் 6 ஆம் தேதிக்குள் மத்திய அரசு தெரிவிக்க உள்ளது.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, உத்தராகண்ட் மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நம்பிக்கை வாக்கெடுப்புக் குறித்து, இறுதி முடிவெடுக்க, இன்னும் இரண்டு நாள் கூடுதல் அவகாசம் தேவை என்றும், அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, மத்திய அரசு இறுதி முடிவெடுப்பதற்காக, வழக்கு விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், மத்திய அரசு, தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு நேற்று யோசனை தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இவ்வாறு கூறியுள்ளது.