பெல்ஜியம் நாட்டு பெண்ணிடம் அத்துமீறல்: டெல்லியில் ஓலா டாக்சி ஓட்டுநர் கைது

டெல்லியில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஓலா டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று மாநில அரசு மீது முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஓட்டுநரை சி.ஆர். பார்க் பகுதியில் கைது செய்ததாக காவல் துறை துணை ஆணையர் ரந்தவா தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்ததும், ஓட்டுநரை பணிநீக்கம் செய்து விட்டதாகவும், விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஓலா டாக்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரியில் பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் டாக்சி ஓட்டுநர் தவறாக நடந்த நிலையில், தலைநகரான டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் வேறெங்கு ‌இருக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் பாதுகாப்பை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.