செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டுக்கு ராகுல் காந்தி ஆதரவு

தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

காளைகளுக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறவேண்டும் என்றும் தமிழகத்தின் பாரம்பரியம் மதிக்கப்படவேண்டும் என்றும் ராகுல் காந்தி விரும்புவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் அவர் இந்த வாரம் ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிகிறது. குறுகிய கால தேர்தல் வெற்றிகளை பெறுவதை விட காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்துவதையே ராகுல் விரும்புவதாகவும் அக்கட்சியின் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.