செய்திகள் உண்மை உடனுக்குடன்

'டைம்ஸ் ஆப் இந்தியா' அலுவலகத்தில் தீ

Times

‌டெல்லியில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ‌நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருக்கும் போது இந்‌தத் தீவிபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. எனினும், ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்து தீயணைப்புத் துறையினர், 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பற்றிய தீ‌ பின்னர் கட்டடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிபத்து‌க்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.