செய்திகள் உண்மை உடனுக்குடன்

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை

உத்தரகண்ட்டில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தையால் மக்கள் நிம்மதியிழந்தனர்.

ஹரித்துவாரில் நிர்மலா காலனியையொட்டி உள்ள ராஜாஜி தேசிய பூங்காவில் இருந்து, அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

ஒரு வீட்டுக்குள் சிறுத்தை புகுந்ததால், அங்கிருந்தவர்கள் வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 11 மணி நேரம் போராடி சிறுத்தையை உயிருடன் பிடித்தனர். அதை கூண்டில் அடைத்து பூங்காவிற்கு கொண்டுச் சென்றனர். சிறுத்தையை பிடிக்கும் முயற்சியின்போது பொதுமக்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்தனர்.