ஏவுகணை நாடுகள் குழுவில் இந்தியா இன்று இணைகிறது

எம்.டி.சி.ஆர்., எனப்படும் ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு குழு நாடுகளில் முழுமையான உறுப்பினராக இந்தியா இன்று முறைப்படி இணைகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கையெழுத்திடுகிறார்.

டெல்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரான்ஸ், நெதர்லாந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் தூதர்களும் பங்கேற்கிறார்கள். 34 நாடுகள் கொண்டு ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு நாட்டுக் குழுவில் இணைவதன் மூலம் அதிலுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியா எளிதில் பெற இயலும்.

என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம் பெறுவது தாமதமாகி வரும் நிலையில் மற்றொரு சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆரில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.