வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு‌ பயிற்சி வழங்க இந்திய அரசு ஏற்பாடு

Foring

வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வெளியுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய தொ‌ழில்திறன் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் வெளியுறவு அமைச்சகமும் கையெழுத்திட்டுள்ளது. இதன் பின்பு பேசிய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உரிய தொழில்திறன் இல்லாததால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பலர் அவதிப்படுவதாகவும் இதற்கு முடிவு கட்டவே பயிற்சி திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.