செய்திகள் உண்மை உடனுக்குடன்

மும்பைக்கு வந்தது அதிவேக டால்கோ ரயில்

மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட டால்கோ ரயில் டெல்லியிலிருந்து மும்பை வந்து சேர்ந்தது. நேற்றிரவு 8 மணியளவில் டெல்லியில் புறப்பட்ட இந்த ரயில் இன்று காலை ‌10 மணியளவில் மும்பை வந்தது.

இந்த ரயில் மூலம் டெல்லி - மும்பை பயண காலம் 4 மணி நேரம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் ரயில் போக்குவரத்தை விரைவாக்கும் ‌திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்த ரயில் வாங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மிகவும் எடை குறைவானது என்றும் வளைவுகளில் வேகமாக திரும்பக் கூடியது என்றும் இதில் பயணித்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்து மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.