எல்ஐசியின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

Supremecourt-fb

எல்ஐசி நிறுவனத்தில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக அந்நிறுவனம் தொடர்ந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எல்ஐசி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியாக வேண்டும் என்றும் நீதிபதி கோபால் கவுடா தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மீண்டும் உறுதி செய்தது.

எல்ஐசி தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்ப்பை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இத்தீர்ப்பு தொடர்பான சீராய்வு மனுவை எல்ஐசி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் அது தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 500 எல்ஐசி தற்காலிக ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.