செய்திகள் உண்மை உடனுக்குடன்

நலிவடைந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் தேசத்தின் அடிப்படை குணத்துக்கு எதிரானது: பிரணாப் முகர்ஜி

நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

நலிவடைந்த பிரிவினருக்கு எதிரான தாக்குதல்கள் தேசத்தின் அடிப்படை குணத்துக்கு எதிரானது என்றும் அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 70-வது சுதந்தர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெண்கள் மற்றும‌ குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அதைச் செய்யத் தவறி விட்டால் நாமெல்லாம் நாகரிகமான சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என சொல்லிக் கொள்வதில் அர்த்தமில்லை என்றும் பிரணப் தெரிவித்தார். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறிய விதம் நமது ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாகவும் குடியரசுத் தலைவர் பெருமிதம் தெரிவித்தார்.