அசாம் மாநில பாஜக தலைவர் மகன் கடத்தல்..பணயத் தொகையாக 1 கோடி கேட்டு மிரட்டல்

Kidnap

அசாம் மாநிலத்தில் தின்சுகியா ஜில்லா பரிஷத் துணைத் தலைவர் ராட்நேஷ்வர் மோரன். இவரது மகன் குல்தீப், ஆகஸ்ட் 1 ம் தேதி கடத்திச் செல்லப்பட்டார். அந்த கடத்தல் கும்பல் குழந்தையை மீட்க பணயத் தொகையாக 1 கோடி ரூபாய் கோரி வருகின்றனர்.

கிளர்ச்சி அச்சுறுத்தல் பேரில் அசாம் மாநிலத்தில் பா.ஜ.,மூத்த தலைவர் மகன் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி அமைப்பினர் உல்ஃபா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். உல்ஃபா உறுப்பினர்கள் மோரன் மகன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் குல்தீப் உயிருக்கு மன்றாடுவது போலவும், அவரை சுற்றி முகம் மூடிய நிலையில் கையில் துப்பாக்கி ஏந்தி ஐந்து கடத்தல்காரர்கள் நிற்பது போன்றும் பதிவாகி உள்ளது. தன் மகனை மீட்டுத் தரக்கோரி ராட்நேஷ்வர் மோரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.