பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய கோரிக்கை

India journalists attack ap

பத்திரிக்கையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாக பத்திரிகையாளர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1992 ஆம் ஆண்டு முதல் 27 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பத்திரிக்கையாளர்களை விட தாலுக்காக்களில் வசிக்கும் பத்திரிக்கையாளர்களே மிகுந்த பாதிப்புக்கு உள்ளகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்கள் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை ஒரே ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.