'பண்பலை சேவை விரிவுபடுத்தப்படும்': மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தகவல்

இந்தியாவில் பண்பலை சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ‘வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்கள் பற்றிய நடவடிக்கைகள் எனது அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. இந்தியாவில் தற்போது 45 சதவீதமாக உள்ள பண்பலை சேவையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 60 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.