சிக்கன்குனியா தொடர்பான விரிவான அறிக்கை தேவை.... டெல்லி அரசுக்கு ஜே.பி.நட்டா உத்தரவு

Chikungunya

தலைநகர் டெல்லியில் சிக்கன்குனியா நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கொசுக்கடியால் உருவாகும் இந்த நோயிக்கு நாடு முழுவதும் இதுவரை சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் பாதிப்பு குறித்து டெல்லி அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய சுகார அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பிறகு பேசிய டெல்லி சுகாராத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், டெங்கு மற்றும் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டெல்லி அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறினார்.