செய்திகள் உண்மை உடனுக்குடன்

பழங்குடியின மக்களின் உரிமையைப் பறிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை

பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

டெல்லியில் பழங்குடியினருக்கான திருவிழாவை தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், வனப்பகுதியில் உள்ள கனிமவளங்களைப் பிரித்தெடுக்கும் பணிகளைக் கூட, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துவிடாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதற்கு முன்னர், வனப்பகுதியில் இரும்பு மற்றும் நிலக்கரிச் சுரங்கப் பணிகள் மே‌ற்கொள்ளப்படும் போது, அதற்கான எந்தப் பலனையும் பழங்குடியின மக்கள் அனுபவித்ததில்லை என்றும் பிரதமர் கூறினார். தற்போதைய அரசு, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை உருவாக்கவும் திட்டங்களை வகுத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.