எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் : இந்தியாவுக்கு 130வது இடம்

எளிதாக தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து பின்தங்கிய இடத்தில் உள்ளது.

உலக வங்கி சமீபத்தில் தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் தொடர்பாக குறியீடு பட்டியலை வெளியிட்டது. இதில், தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 130வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 131வது இடத்தில் இந்தியா இருந்தது. இந்த பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து சிங்கப்பூர் 2வது இடத்திலும் உள்ளது. டென்மார்க், ஹாங்காங், தென்கொரியா, நார்வே, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

வளர்ச்சிக்கான முயற்சியில் இந்தியா சிறிது முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் விரைவான அனுமதியுடன் தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் இன்னும் மேம்படவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியலில் முதல் 50 இடத்துக்குள் வருவதை இலக்காக கொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.