செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு... ராகுல் காந்திக்கு ஜாமீன்

ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, மும்பையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்கள் இன்று காந்திஜி என்று பேசுகின்றனர்” என்று ராகுல்காந்தி கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அவருக்கு தனிநபர் பிணையளித்து வழக்கை ஜனவரி 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.