ரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்

2-2

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்ததால், விவசாயிகள் அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்தப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டுறவு வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்கக் கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்த்து அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தானியங்களையும், பாலையும் கொட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

விவசாயம் மற்றும் தக்ஷிண் குஜராத் கேடுத் சமாஜின் தலைவரான ஜயேஷ் படேல் கூறுகையில், இந்த முடிவானது விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை திரும்பப் பெறா விட்டால், அமுல் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்தப் போவதாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.