கணக்கில் வராத ரூ.428 கோடி பறிமுதல்: வருமானவரித்துறை

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் 428 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு 677 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் 428 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் 86 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. இதே போல், டிசம்பர் 19 ஆம் தேதி வரை தாமாகவே முன் வந்து 3 ஆயிரத்து 185 கோடி ரூபாய்க்கான கணக்குகள் காண்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.