செய்திகள் உண்மை உடனுக்குடன்

காங்கிரஸ் பீதியில் இருக்கிறது: வெங்கையா நாயுடு

Venkaiya naidu fb

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்துள்ள பெருவாரியான ஆதரவைப் பார்த்து காங்கிரஸ் கட்சி பீதியடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

பணமதிப்பு நீக்க விவகாரத்தில் பிரதமர் மோடி புகழடைவது கண்டு அச்சமடைந்திருப்பதால்தான், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.மத்திய அரசின் நடவடிக்கையில் அதிகளவில் கறுப்பு பணம் சிக்கவில்லை என காங்கிரஸ் கூறுவதாகவும் அப்படியென்றால் நாட்டில் லஞ்சமும் ஊழலும் இல்லை என காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறதா என்றும் வெங்கையா கேள்வி எழுப்பினார்.

இதனிடையே பணமதிப்பு நீ்க்க நடவடிக்கை என்ற மத்திய அரசின் யாகம் 50 பேரின் நன்மைக்காக செய்யப்பட்டது என்றும் இதில் மக்கள் நலன் பலியாகியிருப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.