பணிந்தது அமேசான்: தேசியக்கொடி பொறித்த மிதியடிகள் நீக்கம்

Amazon

இந்திய தேசியக் கொடி அச்சிட்ட ‌மிதியடிகள் விற்பனையை அமேசான் இணையதள வணிக நிறுவனம் நிறுத்தியுள்ளது.

கனடாவில் இந்திய தேசியக் கொடியை மிதியடிகளில் அச்சிட்டு அமேசான் நிறுவனம் விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. அத்தகைய மிதியடி‌களை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார்.
இந் நிலையில் அமேசான் இணையதளத்தில் இருந்து இந்திய தேசியக் கொடி அச்சிடப்பட்ட மிதியடிகளின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.