செய்திகள் உண்மை உடனுக்குடன்

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹார‌ சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்கு சிறையில் சில சலுகைகள் தரப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறையில் பி2 பிரிவில் இருக்கும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு தொலைக்காட்சி, கட்டில், மின்விசிறி மற்றும் செய்தித்தாள் உள்ளிட்டவைகளை வழங்க சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உணவு வேண்‌டும் என்ற சசிகலாவின் கோரிக்கையை இதுவரை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. அதேநேரம், சுதாகரனுக்கு இதுவரை எந்த வசதிகளும் செய்துத் தரப்படவில்லை என பரப்பன அக்ரஹா‌ரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வருமான வரி ஆவணங்களை தாக்கல் செய்த ‌சசிகலா‌ தனக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டிருந்தார்.