செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜிஎஸ்டியை அமல்படுத்த தமிழகம் ஒத்துழைக்கும்: நிதியமைச்சர் ஜெயக்குமார்

ஜிஎஸ்டி முறையை சிக்கலின்றி அமல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அவர், வரி வசூலிப்பு அதிகாரம் தொடர்பான விதியை அறிவிக்கையாக மட்டும் வெளிடாமல் சட்டத்திலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ஜிஎஸ்டி முறையை சிக்கலின்றி அமல்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். ஜிஎஸ்டி முறையில் வரி வசூலிப்பு தொடர்பான அதிகாரம் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.