செய்திகள் உண்மை உடனுக்குடன்

2 நாள்தான் முதலமைச்சராக இருப்பார் பாரிக்கர்: காங்கிரஸ் கருத்து

Mano parikar l

மனோகர் பாரிக்கர் இரண்டு நாட்கள் மட்டுமே கோவாவின் முதலமைச்சராக இருப்பார் என காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.

கோவாவில் இன்று மாலை மனோகர் பாரிக்கர் முதலமைச்சராகப் பதவி ஏற்க இருக்கிறார். முதலமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், பாரிக்கர் தனது பெரும்பான்மை பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதியன்று பாரிக்கர் தனது பலத்தை நிரூபிக்க இருக்கிறார். இந்நிலையில் அவர் இரண்டு நாட்களுக்குத்தான் கோவாவின் முதலமைச்சராக இருப்பார் எனவும், அவரால் பலத்தை நிரூபிக்க முடியாது எனவும் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், இது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனக் கூறியுள்ளார்.